jkr

மேற்குலகும் இந்தியாவும் நாட்டுக்கு எதிராக மீண்டும் சதித்திட்டம் தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் ஏற்பாட்டாளர் அமில தேரர் குற்றச்சாட்டு

jkrமேற்குலக நாடுகளும் இந்தியாவும் எமது நாட்டுக்கெதிராக மீண்டும் சதித்திட்டங்களை தீட்ட ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் அதனை வெற்றிபெறச் செய்யும் வகையில் ஜனநாயக விரோதச் செயல்களை நாட்டுக்குள் முன்னெடுத்து வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையம் குற்றஞ்சாட்டியுள்ளது. முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கும், அவர்களுக்குத்தேவையான வசதிகளை உரிய வகையில் ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அரசாங்கம் தவறியுள்ளமை காரணமாக, மேற்குலக நாடுகள் அந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டி, உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் மேற்படி நிலையம் தெரிவித்துள்ளது.
ராஜகிரியவிலுள்ள நிலையத்தின் அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் ஏற்பாட்டாளரான தம்பல அமில தேரர் மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.அவர் மேலும் கூறியதாவது:
ஐக்கியநாடுகள் சபையின் அரசியல் விவகாரம் தொடர்பான பிரதிப்பொதுச்செயலாளர் லின் பஸ்கோவின் வருகை இடம்பெற்றுள்ளது இடம்பெயர்ந்த முகாம்களின் செயற்பாடுகள் அங்குள்ள மனித உரிமைநிலைமை குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நாளையோ அன்றேல் மறுதினமோ வோல்டர் கெலின் வருகைதரவுள்ளார். அதேபோன்று இலங்கையின் மனிதஉரிமைகள், ஜனநாயகம் ஊடகசுதந்திரம் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான மனித உரிமைகள் ஆகியவை தொடர்பான அறிக்கையொன்றை தாக்கல் செய்வதற்கு அமெரிக்காவின் இராஜங்கத்திணைக்களம் தயாராகிவருகின்றது அதேபோன்று இந்தியாவின் பாதுகாப்புசெயலாளர் என்கே நாராயணனும் கடும்தொனியில் கடிதமொன்றை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார். இவற்றையெல்லாம் நோக்கும் போதும் இடம்பெயர்ந்த முகாம்களின் நிலைமை மற்றும் அதுதொடர்பில் ஏற்பட்டிருக்கும் ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் அதுவிடயத்தில் ஏற்பட்டிருக்கின்ற தலையீடுகள் என்பன தொடர்பில் எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது எமது உள்நாட்டுவிடயத்தில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்தை மேற்குலகுக்கு ஏற்படுத்திக்கொடுத்திருப்பதன் வாயிலாக அரசாங்கத்திற்கோ அதனை வழிநடத்தும் நபர்களுக்கோ அல்ல ஆபத்து ஏற்படப்போகின்றது மாறாக தாய்நாட்டிற்கே பங்கம் ஏற்படும்.
அதனைத்தடுப்பதற்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதே தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் முக்கியமான பணியாக அமையும் லின் பஸ்கோ வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் மனிதாபிமான அடிப்படை தேவைகள் கிடையாது என்கிறார் குடியிருப்பதற்கு ஏற்புடைய சூழல் ஏதும் கிடையாது அவை மக்களை நெருக்கிவைத்திருக்கும் சிறைச்சாலை அரசாங்கம் கூறியவற்றை செய்யவில்லை தேவையான வசதிகள் எவையும் செய்துதரப்படவில்லை உடடினயாக இந்தமக்கள் சுதந்திரமாக வாழக்கூடியவகையில் அவர்களின் சொந்த ,டங்களில் மீளக்குடியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்ற அழுத்தமே ஐக்கியநாடுகள் சபையினுõடாக அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது இடம்பெயர்ந்த முகாம்கள் என்பது மக்களை நெருக்கி முடக்கிவைத்திருக்கும் சிறைச்சாலைகளேயாகும் அரசாங்கம் அவை தொடர்பில் நடவடிக்கைகள் எதனையும் செய்யவில்லை. வெள்ளிமுல்லை வாய்க்கால் மோதல்கள் சரியானது அதனை இராணுவத்தினர் நேர்த்தியாக நடத்திமுடித்தார்கள் அதுதொடர்பில் எமக்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது அதில் எமக்கு நம்பிக்கையும் இருந்தது அதற்கு தேவையான அளவிற்கு நாம் இயன்றவரையில் குரல்கொடுத்திருந்தோம் பிரித் நுõலை இராணுவத்தினர் தமக்களிக்கப்பட்ட பணியை செவ்வனே செய்துமுடித்தனர் ஆனாலும் அத்தோடு பணிகள் முடிந்துவிடவில்லை என்பதையும் நாம் கூறிவைத்தோம் பிரிவினைவாத புலிப்பயங்கரவாதிகளின் எஞ்சிய பாகமானது சர்வதேச ரீதியில் செயற்படுகின்றது அதுபோன்ற சக்திகள் செயற்பட்டுவருகின்றன செயற்பட ,டமுள்ளது அப்படியாக செயற்படக்கூடிய இடங்களில் ஒன்றாகவே மூன்று லட்சம் மக்க்ளைக்கொண்ட இடம்பெயர்ந்த முகாம்கள் காணப்படுகின்றன அவர்களை இயன்றவரை விரைவாக மீளக்குடியமர்த்துவதற்கான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அவர்களை பராமரித்துப் பாதுகாக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் இவர்களும் எமது பிள்ளைகள் தாம் என்ற கருத்தியலுடன் அரசாங்கம் அவர்களைப்பார்க்கவேண்டும் அவர்கள் எமது பிள்ளைகள் என்ற சிந்தனையுடன் அரசாங்கம் அவர்களைப்பராமரித்து பாதுகாக்க வேண்டும் அந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் அவர்களிடம் உடைமட்டுமே ,ருக்கின்றது அதுவும் முறையாக அவர்களிடம் கிடையாது அவ்வாறான நிலையில் அவர்கள் உள்ளனர் ,தன்காரணமாகத்தான் இ ங்கிருந்து பொருட்களைச்சேகரித்துக்கொண்டு அங்கு செல்லவதற்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமாகிய நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம் எனினும் எமக்கு அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை அரசாங்கம் என்றவகையில் அவர்களும் அந்தக்கடமையைச்செய்யவில்லை விடுதலைப்புலிகளின் நேசச் சக்திகளுக்கு அங்கு செல்லமுடியுமாகவுள்ளது லின் பஸ்கோ போன்ற வெள்ளையர்களுக்கு அங்கு செல்லவும் பின்னர் அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் முடியுமாகவுள்ளது அரசாங்கம் ,துபோன்ற அநாவசியமற்ற வேலைகளைச்செய்யமுடியுமாகவுள்ளது ஆனால் மக்களை மீளக்குடியேற்றுவது போன்ற அவசியமான பணியை அரசாங்கத்தினால் செய்யமுடியவில்லை ,தன்காரணமாக தவறைச்சுட்டிக்காட்டி தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வெள்ளையர்களுக்கு வாய்த்துள்ளது வெள்ளையர்களின் தலையீடுகள் காரணமாக தனிப்பட்ட நபர்களுக்கோ அரசாங்கத்திற்கோ பிரச்சனைவந்தால் அதுபற்றி எமக்கு கவலையில்லை இந்த வெள்ளையர்களின் தலையீடுகள் காரணமாக எமது கீர்த்திமிக்க நாட்டிற்கு ஏற்படக்கூடிய பங்கம் தொடர்பாகவே எமது கவலைகள் யாவும் உள்ளது எமது தாய்நாட்டின் ,றைமை உலகநாடுகளுக்கு முன்பாக கேலிக்கூத்தாகக்கப்படுவது தொடர்பான கவலைகளே எமக்குள்ளது எம்மத்தியில் ஜனநாயகம் தொடர்பான பிரச்சனை உள்ளது ஊடகசுதந்திரம் தொடர்பான பிரச்சனை உள்ளது இவற்றின் ஊடக வெள்ளையர்கள் எமது நாட்டை உலகின் முன்பாக இழிவுநிலைக்கு தள்ளுகின்றனர் இதன்மூலமாக ஏனைய நாட்டவர்களுடன் பொருளாதார கொடுக்கல்வாங் கல்களைச் செய்யமுடியாத நிலைஏற்படும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது நிலை ஏற்படும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மேற்குலகும் இந்தியாவும் நாட்டுக்கு எதிராக மீண்டும் சதித்திட்டம் தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் ஏற்பாட்டாளர் அமில தேரர் குற்றச்சாட்டு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates