என் காதல் கதவினை
திறந்து உள் நுழைந்து
உவகையுடன் வீற்றிருக்கும்
உன்னதமான பெண்மனியே
உன் இனிமை சிரிப்பை
உள்ளம் ரசித்த நாள் முதல்
உவர்ப்பு கசப்பாக இல்லையடி
காம்பை விட்டு உதிர்ந்த மலர்களும்
கமகமவென்று வாசம் தருவது போல்
கட்டுக்கடங்காத என் துடிப்பு
கன்னி உன்மீது பட்டு விட்டதால்
காவியங்கள் பல படைக்க ஒர் துடிப்பு
தேகத்தில் ஊர் புத்துணர்ச்சி
தெம்பாக இருக்கிறது இந்த இன்பமும்
தெளிந்த நீர்போல் என் மனம்
தெளிவாக உள்ளதடி..
உன் குரலின் உச்சரிப்பில்—புது
உலகம் உருவானது போல்
உள்ளத்தில் உண்மையான தவிப்பு
உதயமானதே என்னுள்…
தென்றல் போன திசையில்
உற்று நோக்கினேன்—இனிமை
தென்னங்கீற்று எனை அள்ளிப்போனது போல்
தேகத்தை கிள்ளிப்பார்தேன்—அது கனவில்லை
தேன்சொட்டச்செட்ட
தொங்கிடும் தேன்கூடுபோல்
உனை கிட்டகிட்ட பார்க்கையிலே
வட்டம் வட்டமாய் பல கண்விழித்த கனவுகள்
அதிகாலை பொழுதினில்
புல்லில் படரும் பனித்துளி
அதில் ஓர் விம்பம்
அது வேறு யாருமில்லை
எனது சிந்தையில் இருக்கும்
என் உயிர் சிற்பமே
திசைகள் மறந்தாலும் -உன்
வாசம் வரும் உன் திசை -எத்திசை என்று
அத்திசை என் சிந்தையால் உதிக்கும் திசை
அப்போ என் உதட்டில் பலரும் புன்னகை
சித்திரம் நீ அல்லடி -உன் மனதில்
முத்திரை பதித்த என் உள்ளம்
விசித்திரமாய் ஓர் இன்ப துடிப்பு -உனை
உச்சம் தலையிலிருந்து
உள்ளங்கால் வரை கண்ணால் ஓர் அளவீடு
வார்த்தையில் வல்லினம் இல்லை
வர்ண நகைகள் உன்மீது nஐhலிக்க வில்லை
வற்றாத உன் மெய்ச்சிரிப்பை நினைக்கயிலே
வகைவகையான கனவு வருகுதடி
உயிர் சிற்ப்பமே உனை
சிந்தையில் வைத்து காக்க
சீற்றமில்லாத கண்சிமிட்டல்—வேண்டுமடி
கனவில் மட்டுமல்ல— நேரிலும் தான்
காத்திருப்பேன்…காத்திருப்பேன்…
நேசமுடன்.. கிளியின் ஓர்கிராமத்து நாயகன்.. வவிதரன்
0 Response to "என் காதல் கதவினை"
แสดงความคิดเห็น