jkr

டினாரா சபீனா வெளியேற்றம்


உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை டினாரா சபீனா அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3 ஆவது சுற்றுடன் வெளியேறினார்.
நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 6 ஆவது நாளான நேற்று முன்தினம் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் உலக தரவரிசையில் 72 ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பெட்ரா கொவிடோவாவை சந்தித்த ரஷ்யாவின் சபீனா 46, 62, 67, என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
அதேபோன்று மற்றுமொரு மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அமெரிக்காவைச் சேர்ந்த மெலனி ஓடினியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இதேவேளை, ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரர் ரொஜர் பெடரர் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 3 ஆவது சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டை சந்தித்த பெடரர் 46, 63, 75, 64 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
அதேபோன்று நேற்று நடந்த மற்றுமொரு மூன்றாவது சுற்று போட்டியில் செர்பியாவின் 4 ஆம் நிலை வீரர் நொவக் டுஜோவக் வெற்றியீட்டினார்.
எனினும் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் 5 ஆம் நிலை வீரர் அன்டி ரொடிக் மூன்றாவது சுற்றுடன் வெளியேறினார். சக நாட்டைச் சேர்ந்த ஜோன் இஸ்னரை சந்தித்த ரொடிக் 67, 36, 36, 75, 67 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "டினாரா சபீனா வெளியேற்றம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates