பேசாலையில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
அருட் தந்தையர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்தையடுத்துப் பொலிஸாருக்கு எதிராக பேசாலை மக்கள் இன்று நடத்திய மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இன்று காலை 10.30 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சு வார்த்தையில் மன்னார் பிரதேச செயலாளரும் கலந்துகொண்டார். மன்னார், பேசாலை, இலங்கை பெந்தகோஸ் சபை நேற்றிரவு நடத்திய வருடாந்த 'ஹன்வெசன்' நிகழ்வு மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி பேசாலையிலுள்ள பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்கள் ஒன்றுதிரண்டு கத்தோலிக்கக் குருக்களுடன் யூட்சன் வீதியில் உள்ள இலங்கை பெந்தகோஸ் சபைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பெந்தகோஸ் சபையினரால் வருடாந்த 'ஹன்வெசன்' நிகழ்வு நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு பாதுகாப்புக்காகப் பொலிஸாரும் குவிக்கப்படிருந்தனர்.
இந்நிலையில் அங்கு சென்ற பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்களும் அருட்தந்தையர்களும் இணைந்து பெந்தகோஸ்த சபையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, பெந்தகோஸ்த சபையினர் அந்த நிகழ்வை நிறுத்துவதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர், அப்பகுதி கத்தோலிக்க மக்கள் கலந்து சென்றுள்ளனர். எனினும் ஒரு சிலர் அவ்விடத்தில் நின்று மீண்டும் கோஷம் எழுப்பினர்.
அப்போது மீண்டும் அவர்களிம் வந்த அருட்தந்தை ஒகஸ்டின் அடிகள், கோஷமிட்டவர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு, அருட்தந்தை வன்முறையைத் தூண்டுகிறார் என நினைத்து அவரைத் தாக்கியுள்ளார்.
இதனால் அப்பகுதி கத்தோலிக்கருக்கும் பொலிஸாருக்கும் இடையே , நேற்று இரவு 8.30 மணியளவில் முருகல் நிலை தோன்றியது.
இந்நிலையில் இன்று அருட் தந்தையரைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராக பேசாலை மக்கள் மறியல் போராட்டம் நடத்தப்படுகின்றது

0 Response to "பேசாலையில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது"
แสดงความคิดเห็น