jkr

நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவே கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் குறித்து ஏற்கனவே கிடைத்துள்ள முறைப்பாடுகளினால் அச்சங்கங்களின் நிர்வாகங்களை மாற்றியமைக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இயங்கும் 24 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமுகாமையாளர்கள் சமாசத் தலைவர் செயலாளர் ஆகியோர் உள்ளடங்கிய இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரை நிகழ்த்தும் போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடுகளின்றிக் கிடைக்கச் செய்வதே சங்கங்களின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய நோக்கத்தை எட்டுவதற்குச் சீரானதொரு நிர்வாகம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற அரசியல் சூழ்நிலை காரணமாகச் சங்கங்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு தன்னிச்சையாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து சங்கங்களின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது அத்தகைய நிலை மாற்றமடைந்து மக்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உயிர்வாழ்வதற்குமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையே முதற்கடமையாகக் கொண்டு செயற்படுவதுடன் ஊழல்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

இன்று கிடைக்கப் பெற்றுள்ள அமைதியுடன் கூடிய சுதந்திரமான இந்த வாழ்க்கையை இனிவரும் காலத்தில் யாருக்கும் தாரைவார்ப்பதற்குத் தமிழ்பேசும் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை யாழ்.பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றினை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட்டுறவுத் துறை அமைச்சரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குதான் ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவே கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates