வடக்கின் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு 1,165 மில். ரூபா ஒதுக்கீடு

மஹிந்த சிந்தனையின் கீழ் வட மாகாண மீன்பிடித்துறை அபிவிருத்திக்கென அரசாங்கம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக வட மாகாணத்தில் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கான மத்திய கால திட்டத்திற்கென 1,165 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில், நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைதீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
வடக்கிலுள்ள மீன்பிடித்துறைமுகங்கள், இறங்குதுறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதோடு நாரா நிறுவன பிரதேச அலுவலகங்களும் அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களும், சிறிய மீன் குஞ்சுகளை வளர்க்கும் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன







0 Response to "வடக்கின் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு 1,165 மில். ரூபா ஒதுக்கீடு"
แสดงความคิดเห็น