1948 இற்கு பின் தோன்றிய மூன்றாவது அரசியல் பரம்பரையின் மிகச்சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா!
செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு சுவிஸ் வாழ் மக்கள் புகழாரம்!.....
இலங்கை சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படுகின்ற 1948 ஆம் அண்டிற்கு பின் தோன்றிய மூன்றாவது அரசியல் பரம்பரையின் மிகச்சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் நீங்கள் என சுவிஸ் வாழ் புலம் பெயர் மக்கள் ஈ.ழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பாராட்டுதல் வழங்கி புகழாரம் சூட்டி கௌரவித்துள்ளனர்.
தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியத்திற்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிற்சர்லாந்திற்கான விஐயத்தினை மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சூரிச் நகரில் பொது மக்கள் பிரதிநிதிகளாலும் ஈ.பி.டி.பி யின் சுவிஸ் பிராந்திய அமைப்பாளர்களாலும் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே மேற்படி கருத்துக்களை கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களில் சிலர் பாராட்டுக்களை வழங்கி புகழாரம் சூட்டி கௌரவித்துள்ளனர்.
இதன் போது அங்கு திரண்டிருந்த மக்கள் கரகோசம் எழுப்பி ஆரவாரம் செய்து அந்த கருத்தினை ஆமோதித்து தமது கர கோசத்தினால் அதற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வினை இலங்கையர் ஐனநாயக பேரவையின் தலைவரான திரு, ராஐ;மோகன் அவர்கள் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்தே செயலாளர் நாயகம் அவர்கள் மிக எளிமையாகவும் நடை முறை சாத்தியமாகவும் தமது கட்சியின் கருத்துக்களை எடுத்து விளக்கியிருந்தார். ஈ.பி.டி.பி யின் உறுப்பினர்கள் நீங்கலாக சுமார் 200 பேர் வரையில் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தியிருந்த செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெறுவது குறித்த நடைமுறைச் சாத்தியமான வழிமுறை குறித்து எடுத்து விளக்கியிருந்ததோடு எமது மக்களுக்கான மீள் குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வாழ்வியல் உரிமைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் உரை நிகழ்த்தியிருந்தார்.
சிஙகள சகோதர மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள் அனைத்ததையும் தமிழ் பேசும் மக்களும் அனுபவிப்பதற்கான உரிமை வேண்டும் என்றும் அதற்கு கடந்த கால எதிர்ப்பு அரசியல் ஒருபோதும் கை கொடுக்கப்போவதில்லை என்றும் இணக்க அரசியலே எமது மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கான மிக சிறந்தது நடை முறை சார்ந்த வழி என்றும் அதற்கு மக்கள் அணி திரண்டு வந்தால் மட்டுமே இந்த முயற்சி விரைவு படுத்தப்படும் என்றும் தோழர் டக்ளஸ் வேவானந்தா அவர்கள் தனது கருத்தை அங்கு வலியுத்தியிருந்தார்.
இந்த நிகழ்வின் போது சுவிஸ் தமிழர் பேரவையின் தலைவர் திரு. நமசிவாயம் உட்பட புலிகளிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டு தமது கேள்விகளை எழுப்பியிருந்ததோடு அதற்கான பதிலை செயலாளர் நாயகம் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறப்பிடத்தக்கது.
இது குறித்த உண்மைகளும் நிகழ்வு விபரணங்களும் தொடரும்.

0 Response to "1948 இற்கு பின் தோன்றிய மூன்றாவது அரசியல் பரம்பரையின் மிகச்சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா!"
แสดงความคิดเห็น