ஆந்திர அரசு வைத்தியசாலையில் பிறந்த 6 குழந்தைகள் ஒரே நாளில் மரணம்

ஆந்திர அரசு வைத்தியசாலையின் பிரசவ வார்டில் பிறந்த குழந்தைகள் 6 பேர் ஒரே நாளில் இறந்தனர். இந்த சம்பவத்தால் அரசு வைத்தியசாலை முன் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பழைமை வாய்ந்த ஒரு வைத்தியசாலை என்றே கூறப்படுகிறது. காரணம் அருகில் புதிய கட்டட அமைப்புடன் மாற்று வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நாள்தோறும் எண்ணற்ற பிரசவங்கள் நடப்பதுண்டு. பழைய வைத்தியசாலையிலேயே பிரசவ வார்ட் உள்ளது. இப்பகுதியில் கர்ப்பிணி பெண்கள் வழக்கம் போல் சேர்க்கப்பட்டனர்.
சனிக்கிழைமை வழக்கம் போல் பிறந்த சில குழந்தைகளுக்கு இங்கு 'பேட்டரி'ல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி சில குழந்தைகள் இங்கு 'பேட்டரி'ல் வைக்கப்பட்டனர்.
கவனக்குறைவு
இந்நிலையில் துர்காபவானி- ஆதிரநாராயணன் தம்பதியினருக்குப் பிறந்த குழந்தை இறந்தததாக முதல் தகவல் வெளியானது.
"எனது குழந்தை இறந்தமைக்கு டாக்டர்களின் கவனக்குறைவுதான் காரணம் என டாக்டர்களிடமும் , வைத்தியசாலை ஊழியர்களிடம் வாதாடினார் துர்கா.
இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக 6 குழந்தைகள் இறந்ததாகத் தெரிய வந்தது. இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது .
இயற்கை மரணமா ?
இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை சூப்பிரண்ட் கூறுகையில்,
"இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் இங்கு 'பேட்டரி'ல் வைக்கப்பட்டிருந்தது. இதில் 4 பேர் இயற்கையாக இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் முழு விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இங்கிருந்த 11 'பேட்டர்' களில் 4 கருவிகள் தான் இயங்கும் நிலையில் இருந்ததாகவும் , ஏனைய கருவிகள் பழுது பட்டிருந்ததாகவும் குழந்தைகளை இழந்த பெற்றோர் கூறினர்.
இதுதான் குழந்தைகள் இறப்புக்கு காரணமாகி விட்டது என்றனர் அவர்கள் சோகமாக







0 Response to "ஆந்திர அரசு வைத்தியசாலையில் பிறந்த 6 குழந்தைகள் ஒரே நாளில் மரணம்"
แสดงความคิดเห็น