jkr

இடம்பெயர் மக்களைச் சந்திக்க த.தே.கூ. உறுப்பினர்கள் வவுனியாவில்


வன்னிப் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவொன்று இன்று அங்கு சென்றுள்ளது.

இதன் பிரகாரம் இன்று காலை கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா, பா.அரியநேத்திரன், ஐ.எம்.இமாம்,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் டெலோ செயலாளர் நாயகம் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் வவுனியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தங்களுடன் தற்போது வவுனியாவில் தங்கியிருக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவநாதன் கிஷோர்,வினோ நோகதாரலிங்கம் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் இணைந்து கொள்வார்கள். இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தாம் புறப்பட முன்னர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, துணுக்காய் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கும் இக் குழுவினர் இன்று மாலை வரை அங்கு தங்கியிருந்து பொதுமக்களைச் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிக்கொப்டர்கள் மூலம் முதலில் மன்னார் பகுதிக்கு விஜயம் செய்யும் இவர்கள் அதன் பின்னர் கிளிநொச்சி மற்றும் துணுக்காய் பகுதிகளுக்கு செட்டிக்குளத்திலுள்ள மெனிக் பாம் நிவாரணக் கிராமத்திற்கும் அழைத்துச் செல்லப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இடம்பெயர் மக்களைச் சந்திக்க த.தே.கூ. உறுப்பினர்கள் வவுனியாவில்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates