ஆப்கான் ஜனாதிபதியாக மீண்டும் ஹமீட் கர்ஸாய் தெரிவு

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக மீண்டும் ஹமீட் கர்ஸாய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இறுதி நேரத்தில் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் திடீரென அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக ஹமீட் கர்ஸாயை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல்களுக்கு போட்டியிட ஹமீட் கர்ஸாய் மட்டுமே முன்வந்துள்ளதாகவும் இதனால் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தேர்தல் ஆணையாளர் அப்துல்லா லொடின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல்கள் நடைபெறவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
2004ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் நாட்டை ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உலக நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேர்மையான ஆட்சிக்குத் தாம் தலைமைத் தாங்கி நடத்தப் போவதாக ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஹமீட் கர்ஸாய் தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா தேர்தலை வாபஸ் பெற்றதையடுத்தே ஹமீட் கர்ஸாய் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானார்.







0 Response to "ஆப்கான் ஜனாதிபதியாக மீண்டும் ஹமீட் கர்ஸாய் தெரிவு"
แสดงความคิดเห็น