கரவெட்டிப் பிரதேச வைத்தியசாலைக் கட்டிடத் திறப்பு விழா!
கரவெட்டிப் பிரதேச வைத்தியசாலைக் கட்டிடத் திறப்பு விழாவில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுனர் சந்திரசிறி அவர்களும் கலந்து கொண்டனர்.நேற்று வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கரவெட்டிப் பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் புதிய வைத்தியசாலைக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார். வட மாகாண ஆளுநர் மாகாணக் கொடியை ஏற்றி வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த புதியக் கட்டிடத் திறப்பு விழாவில் வட மாகாண பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி யாழ். அரசாங்க அதிபர் கே.கணேஷ் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் கரவெட்டிப் பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் மற்றும் ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உட்பட அப்பகுதிப் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.












0 Response to "கரவெட்டிப் பிரதேச வைத்தியசாலைக் கட்டிடத் திறப்பு விழா!"
แสดงความคิดเห็น