jkr

அவுஸ்திரேலியாவில் அரசியல் அந்தஸ்து இல்லாத இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்: குடிவரவு அமைச்சர்


அரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் ஊடாக, ரூட் அரசாங்கத்தால், இதுவரையில் 119 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்டவர்கள் முறையாக அரசியல் அந்தஸ்த்து கோர தகுதி அற்றவர்கள் என கருதப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அண்மையில் இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி படகு மூலம் சென்ற 50 பேரில் மூன்றில் இரண்டு பங்கினரும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் கிரிஸ்மஸ் தீவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஆறு பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் 12 பேர் பாதுகாப்பு விசாக்களுடன் குடியமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அவுஸ்திரேலியாவில் அரசியல் அந்தஸ்து இல்லாத இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்: குடிவரவு அமைச்சர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates