jkr

என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள்



































உலகில் உள்ள என்ஜீனியரிங் பட்டதாரிகள், பிசினஸ் நிறுவனங்கள் அதிகம் விரும்பும் நிறுவனமாக கூகுகள் விளங்குவதாக இரண்டு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நிறுவனமாகவும் கூகுள் தேர்வாகியுள்ளது.

யுனிவர்சம் என்ற உலகளாவிய நிறுவனம் ஒன்று இதுதொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, உலகில் உள்ள 50 வர்த்தக மற்றும் என்ஜீனியரிங் நிறுவனங்களில் கூகுளுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களின் முதல் விருப்பமாக கூகுள் உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களிடம் இதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் அமெரிக்கா , ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து , இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், கனடா, இந்தியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டாப் 50 பட்டியலில் கோககோலா (13), ஆரக்கிள், சிட்டிகுரூப் (21), பிலிப் மாரிஸ், கிளாஸ்கோ ஸ்மித்கிளைன், ஆல்காடெல், பிஎம்டபிள்யூ ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் பத்து நிறுவனங்கள்..

1. கூகுள் - ரேலி பேஜ், செர்ஜி பிரின் ஆகியோர் இணைந்து 1996ம் ஆண்டு பேக்ரப் என்ற சர்ச் என்ஜினை உருவாக்கினர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக சர்வர்களில் இது ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டு இந்த சர்ச் என்ஜினுக்கு கூகுள் என லேரி, பிரின் பெயர் கொடுத்தனர். கூகோல் (googol) என்ற கணித வார்த்தையிலிருந்து இந்தப் பெயரை அவர்கள் உருவாக்கினர். கூகோல் என்றால், 1 பக்கத்தில் 100 சைபர்களைப் போட்டால் வரும் எண்ணுக்குப் பெயர்தான் கூகோல். அதாவது முடிவே இல்லாமல் தகவல்களை அறிவது என்ற பொருளில் இந்தப் பெயரை அவர்கள்
சூட்டினர்.

1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கூகுள் என்ற நிறுவனம் இல்லாத நிலையில், அந்த நிறுவனத்தின் பெயரில் சன் இணை நிறுவனர் ஆண்டி பெக்டோல்ஸீம் 1 லட்சம் டாலர் செக் கொடுத்தார் லேரி இரட்டையர்களிடம்.

அடுத்த மாதம் மென்லோ பார்க், சான்டா மார்கரிட்டா நகரில், ஒரு காரேஜில், கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது.

செப்டம்பர் 4ம் தேதி தங்களது நிறுவனத்தை கலிபோர்னியாவில் பதிவு செய்தனர் லேரி இரட்டையர்கள். பின்னர் புதிய வங்கிக் கணக்கையும் கூகுள் பெயரில் தொடங்கினர். இதன் பின்னரே ஆண்டி கொடுத்த செக்கை வங்கியில் போட்டனர்.

கூகுள் நிறுவனத்தின் முதல் ஊழியராக சேர்ந்தார் ஸ்டான்போர்டில் படிப்பை முடித்த கிரேக் சில்வர்ஸ்டீன். 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் 100 டாப் சர்ச் என்ஜின் இணையதளங்களில் கூகுள் ஒன்றாக இடம் பெற்றது.

2வது இடத்தில் இருப்பது பிரைஸ்வாட்டர்ஹவுஸ்.

என்ஜீனியரிங் பட்டியலில் 2வது இடமும், வர்த்தக பட்டியலில் 3வது இடத்தையும் பிடித்திருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

என்ஜீனியரிங் பட்டியலில் 3வது இடம் ஐபிஎம் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.

4வது இடம் பிஎம்டபிள்யூவுக்கு. 5வது இடத்தில் இருப்பது இன்டல். 6வது இடம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு.

சோனி நிறுவனம் 7வது இடத்திலும், சீமன்ஸ் 8வது இடத்திலும் உள்ளன.

ஷெல் நிறுவனம் 9வது இடத்திலும், டெலோயிட் 10வது இடத்திலும் உள்ளன.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates