வன்னியில் படையினரால் மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் சேர்க்கப்படுமா?

வன்னியில் படையினரால் சுமார் 650 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் படையினரால் மீட்கப்பட்ட நகைகள் உரிமை கோரும் பொதுமக்களிடம் சேர்ப்பிக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட 659.5 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளும், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது
இந்த நகைகள் ஒப்படைக்கப்பட்டபோது உரிமையாளர்களின் விபரங்களும் குறித்த வங்கிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே இது உரியவர்களிடம் எவ்வாறு சேர்க்கப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அத்துடன் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்ப:டும் போது அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவார்களா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது







0 Response to "வன்னியில் படையினரால் மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் சேர்க்கப்படுமா?"
แสดงความคิดเห็น