jkr

சுகோயில் போர் விமானத்தில் பறந்தார் பிரதீபா!-உலக சாதனை!!


புனே: இன்று சுகோய் போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

இதற்காக வழக்கமாக அணியும் சேலைக்குப் பதில், அவர் ஜி-சூட் அணிந்து பயணித்தார்.

இன்று காலை காலை புனே வந்த அவருக்கு லோஹேகாவ்ன் விமானப் படைத் தளத்தில் வீரர்கள் அணி வகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

பின்னர் சுகோய் பயணத்தை அவர் மேற்கொண்டார்.

சுகோய் போர் விமானத்தை விமானி விங் கமாண்டர் எஸ்.சாஜன் இயக்க, அவருக்கு பின் பகுதியில் உள்ள துணை விமானியின் காக்பிட்டில் அமர்ந்து பயணித்தார் பிரதீபா.

வானில் சுமார் 40 நிமிடங்கள் விமானத்தில் அவர் வட்ட​மிட்டார். மணிக்கு 2,000 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது சுகோய். ஆனால், ஜனாதிபதி பயணித்ததால் 900 கி.மீ. வேகத்துக்கும் குறைவான வேகத்திலேயே சுகோய் இயக்கப்பட்டது. அதிகபட்சமாக 10,000 அடி உயரத்தில் மட்டுமே அந்த விமானம் இயக்கப்பட்டது.

இதைப் போல இரு மடங்கு உயரத்தில் அதனால் பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குடியரசுத் தலைவருக்கான ஜி-சூட் உடையைக் கண்டுபிடிப்பதற்குள் திணறிப் போய் விட்டதாம் விமானப்படை. காரணம், வழக்கமான ஜி-சூட் உடைகளை அணிபவர்கள் நல்ல உயரமும், திடகாத்திரமுமான உருவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் பிரதீபா பாட்டீலுக்குப் பொருத்தமான ஜி-சூட் உடை கிடைக்காமல் தவித்துப் போய் விட்டனராம்.

பின்னர் ஒரு வழியாக ஜி-சூட் உடையை ரெடி செய்து வைத்து விட்டனர்.

மேலும், விமானப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழு பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து விமான பயணம் குறித்து விளக்கினர்.

சுகோய் விமானத்தில் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி அவர் சுகோய் விமானத்தில் பறந்தார்.
கின்னஸ் புத்தகத்தில் பெயர்..

இதையடுத்து தற்போது சுகோயில் பறந்த 2வது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரதீபா பாட்டீல் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 74 வயதான பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பறந்த முதல் பெண் ஜனாதிபதி ஆவார். இதன்மூலம் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளார்.

போர் விமானத்தில் பறந்து முடித்து மிக மகிழ்ச்சியாக தரையிறங்கிய பிரதீபா நிருபர்களிடம் பேசுகையில், நமது முப்படைகளின் கையில் நாடு மிக பாதுகாப்பாக உள்ளது. பெண்கள் முன்பெல்லாம் பாதுகாப்புப் படைகளில் இடம் பெறுவதில்லை. இப்போது நிலைமை மாறிவிட்டது.

இந்திய விமானப் படையின் போர் விமானங்களை இயக்குவதிலும் பெண்களுக்கு வாய்ப்புக்கள் தருவது குறித்து சரியான முடிவெடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சுகோயில் போர் விமானத்தில் பறந்தார் பிரதீபா!-உலக சாதனை!!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates