jkr

தொழிற் பயிற்சிக் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்!



சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் கீழ் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையத்தின் கண்காட்சியை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இன்று காலை தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தின் தொழில் பயிற்சி மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் தொழிற்பயிற்சிக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பின்றிக் கஷ்டப்படும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும் கிராமப்புறத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளம் வயதினரைக் கவனத்தில் கொண்டும் இத்தகைய தொழிற் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தினை தனது அமைச்சின் மூலம் ஆரம்பித்து வைத்ததாகத் தெரிவித்ததுடன் இத்தகைய பயிற்சி பெறுபவர்களுக்கு 4000 ரூபாவை உதவிப் பணமாக மாதாந்தம் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய தொழிற் பயிற்சி நெறிகளின் மூலம் இளைஞர்கள், யுவதிகள் கூடிய பயனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பின்றி அல்லற்படும் மக்களுக்கு இத்தகைய பயிற்சிகள் ஓர் அரிய வாய்ப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயிற்சி பெற்றவர்கள் சிறு சிறு உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றைச் சந்தைப்படுத்துவதன் மூலம் ஓரளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தமிழ் தலைமைகள் எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் இத்தகைய பயிற்சிகளைத் தமிழ் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வழங்க முடியாத சூழ்நிலை நிலவியதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது அத்தகைய சூழல் முற்றிலும் மாறியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இத்தகைய பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றும் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பயனை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

இக்காண்காட்சியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் தொழிற் பயிற்சிப் பிரிவுப் பணிப்பாளர் என்.கோணேஸ்வரன் கோட்டக் கல்வி அதிகாரி என்.கைலநாதன் உட்படப் பிரதேச செயலக அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். கண்காட்சியில் பல்வேறு ஆடை உற்பத்திகள் இனிப்பு வகைகள் மேசன் பயிற்சி தொடர்பான உபகரணங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.










  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தொழிற் பயிற்சிக் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates