உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

சேவா வனிதா பிரிவின் அனுல பெர்னாண்டோ வீடமைப்பு திட்டத்தின் கீழ் மோதல்களின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன் போது மொரவேவவில் மோட்டார் தாக்குதலில் உயிரிழந்த கோப்ரல் சம்பத் குமாரவின் குடும்பத்திற்கு விமானப்படையினரின் சேவா வனிதா பிரிவினால் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடொன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விமானப்படையினரின் சேவா வனிதா பிரிவின் தலைவர் நெலும் குணதிலக, அனுல பெர்னாண்டோ வீடமைப்பு திட்டத்தின் முகாமையாளர் தாரக டயஸ் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.







0 Response to "உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு"
แสดงความคิดเห็น