ஜனாதிபதி மஹிந்தவுக்கு ம.ம.மு. முழு ஆதரவு- பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மலையக மக்கள் முன்னணி வழங்கும் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்கவுள்ளது. தேர்தலில் ஜனாதிபதி வெற்றி பெறுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
மேலும், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஜனாதிபதி முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எனவே, அவரை ஆதரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.







0 Response to "ஜனாதிபதி மஹிந்தவுக்கு ம.ம.மு. முழு ஆதரவு- பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்"
แสดงความคิดเห็น