ஏறாவூரில் இளம் குடும்பப்பெண் படுகொலை

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களினால் கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மீராக்கேணியைச் சேர்ந்த செய்யது மொகமது ரபீனா (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ள இப்பெண்ணின் சடலம் இன்று காலை தாமரைக்கேணி என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண்ணின் கணவர் வாகன விபத்தில் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,இறுதியாக இப்பெண் நேற்று முன் தினம் கணவனைப் பார்க்கச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் உறவினர்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பெண் பாலியல் வன்முறைக்குட்படுத்திய பின்பே படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பு மஜிஸ்திரேட் வீ.இராமக்கமலன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணையினை மேற் கொண்டார்.
பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் கையளிப்பது என்ற உத்தரவையும் பிறப்பித்த அவர் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் உத்தரவையும் பொலிஸாருக்கு பிறப்பித்தார்







0 Response to "ஏறாவூரில் இளம் குடும்பப்பெண் படுகொலை"
แสดงความคิดเห็น