ஹோம்ஸ் இம்மாதம் இலங்கை வருகிறார்?
மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மீண்டும் இம் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க விடுத்த அழைப்பை ஏற்றே ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் அரச உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் வவுனியா நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்யவுள்ள ஜோன் ஹோம்ஸ் அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவார் என அரசாங்கமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை ஜோன் ஹோம்ஸ் பார்வையிடுவார்.
அண்மைக்காலமாக அரசாங்கம் மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளமை தொடர்பில் ஜோன் ஹோம்ஸுக்கு விரிவாக விளக்கமளிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







0 Response to "ஹோம்ஸ் இம்மாதம் இலங்கை வருகிறார்?"
แสดงความคิดเห็น