நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சமூகப் பாதுகாப்பு சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு
நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகப் பாதுகாப்பு மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையக் கட்டிடத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
இன்று (2) நெடுந்தீவு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அப்பகுதி ரோமன் கத்தோலிக்கக் கல்லூரி மாணவிகளின் பேன்ட் வாத்தியக் குழுவின் இசையுடன் உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அங்குள்ள சமூகப் பாதுகாப்பு மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இப்பகுதிக்கான உதவி அரசாங்க அதிபர் பிரிவை பிரதேச செயலகப் பிரிவாகத் தரமுயர்த்த தான் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் இதேபோன்று குடா நாட்டில் மேலும் மூன்று உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளைத் தரமுயர்த்த வேண்டும் எனத் தெரிவித்ததுடன் இங்குள்ள அரச நிர்வாக அலுவலகங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நீக்கி அரசின் நிர்வாக நடவடிக்கைகளைச் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்ற உதவி அரசாங்க அதிபரின் கோரிக்கையையும் தான் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் உரை நிகழ்த்தும் போது பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்காகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்புப் பணிகள் குறித்து குறிப்பிட்டதனை தான் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் என்.திருலிங்கநாதன் அப்பிரதேசப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி மற்றும் கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

0 Response to "நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சமூகப் பாதுகாப்பு சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு"
แสดงความคิดเห็น