ஹெய்ட்டி நாட்டுக்கு உலக வங்கி 100 மில். டொலர் நிதிஉதவி
ஹெய்ட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பல்வேறு நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டுக்கு உலக வங்கியும் உதவ முன்வந்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
ஹெய்ட்டியைத் தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இந்நிலடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2ஆக பதிவாகியுள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
0 Response to "ஹெய்ட்டி நாட்டுக்கு உலக வங்கி 100 மில். டொலர் நிதிஉதவி"
แสดงความคิดเห็น