jkr

முத்தரப்புத் தொடரின் சாம்பியனாக இலங்கை அணி


முத்தரப்புத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று சாம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கிது.

மிர்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பகலிரவு போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துக்கு முகம் கொடுக்க முடியாது சரமாரியாக ஆட்டமிழந்தனர் தொடக்க துடுப்பாட் வீரர் கம்பீர் ஓட்டம் எடுக்காத நிலையில் குலசேகரா பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 2 ஓட்டங்களுக்கு வெலகெதர பந்துவீச்சில் சங்ககாரவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

முதல் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டதையடுத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சேவாக் 42 ஓட்டங்களுக்கு குலசேகரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.மேலும் யுவராஜ் சிங் ஓட்டம் எதுவும் எடுக்காத நிலையில் வெலகெதர பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டோனி 19 பந்துகளில் 3 பெவுண்டரிகளுடன் 14 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, குலசேகரா பந்துவீச்சில் சங்ககராவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்திய சுரேஸ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பொறுமையான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர்.

ஜடேஜா 64 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். மேலும் ஹர்பஜன் சிங் 11 ஓட்டங்களுடனும், ஜாகீர் கான் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய சுரேஸ் ரெய்னா 115 பந்துகளில் ஒரு சிக்சர், 10 பெண்டரிகளுடன் 106 ஓட்டங்களை எடுத்து 46ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய குலசேகரா 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், வெலகெதர 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை எடுத்து, முத்தரப்பு போட்டியின் சாம்பியன் கிண்ணத்தை வென்றது. துடுப்பாட்டத்தில் தரங்க ஓட்டம் எதுவும் எடுக்காமல் நெஹ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

2ஆவது விக்கெட்டுக்கு டில்ஷான், சங்ககாரா இணைந்து 93 ஓட்டங்களைப் பெற்றனர். டில்ஷான் 54 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து யுவராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய சங்ககாரா 51 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜனின் பந்து வீச்சில் சேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மேலும் சமரவீர 27 ஓட்டங்களுடனும், கண்டம்பி 18 ஓட்டங்களுடனும், ரண்தீவ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி, அணிக்கு வெற்றி தேடித் தந்த முன்னாள் அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன 81 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் பெற்றார்.

அதேவேளை, ஆட்டமிழக்காது பெரேரா 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். நேற்றைய போட்டியின்போது தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணித் தலைவர் சங்ககாரா தெரிவு செய்யப்பட்டார். , , ,
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "முத்தரப்புத் தொடரின் சாம்பியனாக இலங்கை அணி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates