கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் போயினர் : விற்காமல் போன பாகிஸ்தான் வீரர்கள்
மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக் கான ஏலம் இன்று மும்பையில் துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெய்ரான் போலார்டு 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வரை விலை போயுள்ளார். இவரை மும்பை இந்தியன் அணி விலைக்கு வாங்கியுள்ளது. ஐ.பி.எல்., அமைப்பின் சார்பில், மூன்றாவது "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25 ம் தேதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், இன்று மும்பையில் நடந்தது. மொத்தம் உள்ள 8 அணிகள் ஏலத்தின் மூலம் வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளன. மொத்தம் 97 பேர், முதற் கட்டமாக ஐ.பி.எல்., ஏலத்துக்கு விண்ணப்பம் செய்தனர்.
வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு 66 பேர் மட்டுமே இறுதியில் தேர்வாயினர். அதிக பட்சமாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா தரப்பில் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் (8 பேர்), இலங்கை (8 பேர்), இங்கிலாந்து (9 பேர்), நியூசிலாந்து (4 பேர்) வீரர்களும் ஏலத்தில் பங்கேற்றனர். வங்கதேசம், கனடா, நெதர்லாந்து, ஜிம்பாப்வே தரப்பில் தலா ஒரு வீரர் வாய்ப்பு பெற்றனர்.
கடந்த 2008 ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடந்தது. அப்போது நடந்த ஏலத்தில் 3 ஆண்டுகளுக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. தற்போது 3 வது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், இந்த ஆண்டு (2010) மட்டுமே பங்கேற்க முடியும். .
வெஸ்ட் இண்டீசின் கெய்ரன் போலார்டு, கெமர் ரோக், பாகிஸ் தானின் அப்ரிதி, உமர் அக்மல், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட், ஆஸ்திரேலியாவின் ஹாடின், பிலிப் ஹியுஸ் உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே ஏலத்தில் ஒப்பந்தம் செய்ய அணிகள் விரும்புகின்றன.
யார் ? எவ்வளவுக்கு விலை போயினர் : ஏலத்தில் வீரர்கள் விலை போன விவரம் வருமாறு : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரான் போலார்டு என்பவர் 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர் ( இந்திய ரூபாயில் : 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ) , இவரை மும்பை இந்தியன் அணி வாங்கியுள்ளது. தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் வீரர் வெயர்ன் பார்னர் என்பவர் 6 லட்சத்து 10 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில் : 2 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ) இவரை டில்லி டேர்டெவில்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது. நியூஸிலாந்து வீரர் ஷேன் பாண்ட் என்பவர் 7 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில் : 3 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம்) , இவரை கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமர் ரோச் 7 லட்சத்து 20 ஆயிரம் டாலர் ( இந்திய ரூபாயில்: 3 கோடியே 24 லட்சம் ). இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஒரே வீரரை 2 அணிகள் கேட்கும் பட்சத்தில் டைம் பிரேக்கர் முறையில் விற்று கொடுக்கப்பட்டது. அந்தந்த அணி ஓனர்கள் ஏலம் கேட்டனர்.
இந்திய வீரர் முகம்மது கைப், பாகிஸ்தான் வீரர் அப்ரிதி , ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹெடின் ஆகியோர் முதல் கட்ட ஏலத்தில் யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இந்திய வீரர் முகம்மது கைப் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு ( இந்திய ரூபாயில்: ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம்) இவரை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியுள்ளது.இவர் முதலில் ஏலம் விடுக்கப்பட போது யாரும் ஏலம் கேட்கவில்லை. 2 வது ரவுண்டுக்கு வந்தபோதுதான் இவர் விற்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிதி, கம்ரன் அக்மால் ஆகிய இருவரையும் கடைசிவரை யாரும் விலைக்கு வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் போயினர் : விற்காமல் போன பாகிஸ்தான் வீரர்கள்"
แสดงความคิดเห็น