டெங்கு நோய் மீண்டும் தீவிரம் : கண்டியில் 30 பேர்; நாடு முழுவதும் 245 பேர் மரணம்!
கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளதாக டெங்கு நோய் தடுப்பு மத்திய நிலையம் அரச இணையத்தளம் ஒன்றுக்கு இன்று அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக டெங்கு நோய் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், தற்போது பெய்துவரும் மழை காரணமாக நுளம்புகள் பெருகி நோய் பரவுவது அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை 3,249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் இம்மாவட்டத்தில் 30 பேர் இந்நோய் காரணமாக மரணமடைந்துள்ளனர்.நாடு முழுவதிலும் இதுவரை 24 ஆயிரத்து 984 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்; 245 பேர் மரணமடைந்துள்ளனர். கேகாலை, கம்பஹா, கொழும்பு, குருநாகல், களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவுவதாக நோய்த் தடுப்பு மத்திய நிலையம் அறிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 Response to "டெங்கு நோய் மீண்டும் தீவிரம் : கண்டியில் 30 பேர்; நாடு முழுவதும் 245 பேர் மரணம்!"
แสดงความคิดเห็น