jkr

யாழ் பிரதிமேயர் பதவி 1 வருட ஈழமக்கள் ஜானாயக கட்சிக்கு


யாழ் மாநகர சபை தேர்தலில் ஆளும் பொதுஜன ஜக்கிய முண்ணனி வெற்றி பெற்றதையடுத்து, உப மாநகர சபை முதல்வராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேரந்த ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபை தேர்தலில் பொதுஜன ஜக்கிய முன்னணியின் பட்டியலில்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன தமது வேட்பார்களை நிறுத்தியிருந்தது. இந்த நிலையில் யாழ் மாநகர சபையினை ஆளும் கட்சி கைப்பற்றியதும் மாநகர முதல்வர்,மற்றும்; பிரதி முதல்வர் ஆகியோரை ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த இருவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. கூட்டமைப்பின் அனுமதியின்றி அறிவித்ததையடுத்து,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,பொது ஜன ஜக்கிய முன்னணியின் செயலாளார் நாயகம் சுசில் பிரேம ஜயந்தவுக்கு எழத்து மூலமாக தமது நியாயமான வேண்டுகோளை முன்வைத்திருந்தது. வடமாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபையின் முதல்வராக மர்ஹசும்; சுல்தான்,பிரதி மேயராக எம்.எம்.பஷீர் ஆகியோர் இருந்துவந்துள்ளனர்.விடதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம்கள் புத்தளம்,நீர்கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில்; அகதிகளாக வாழ்ந்து வந்த சூழலில்,தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றதால்,யாழ் மாநகர சபையின் ஆட்சியினை ஆளும் கூட்டமைப்பு கைப்பற்றியது. பாரம்பரிய முறைக்கு மாற்றமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியை சார்ந்தவர்களை முதல்வராகவும்,பிரதி முதல்வராகவும் நியமித்தமை கூட்டமைப்புக்குள் கருத்து முரண்படுகளை தோற்றுவித்துவந்த நிலையில்.இன்று பொதுஜன ஜக்கிய முன்னணி செயலாளார்,அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது,யாழ் மாநகர சபை உதவி மேயர் பதவி ஒருவருடத்துக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருக்கு வழங்குவதென்ற தீர்மாணம் எடுக்கப்;ட்டதுடன்,ஒருவருடத்தின் பின்னர் அப்பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸசுக்கு வழங்குவது என்ற உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொதுஜன ஜக்கிய முன்னணயின் செயலாளாரும்,அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளார் ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்த உடன்படிக்கையில்; கைச்சாத்திட்டனர்.கல்வி அமைச்சில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. ஆகில இலங்கை மஸ்லிம காங்கிரஸ் செயலளார் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட்,அமைச்சர் நஜீப் அப்துல்; மஜீத் உட்பட பலரும் சமூகமளித்திருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ் பிரதிமேயர் பதவி 1 வருட ஈழமக்கள் ஜானாயக கட்சிக்கு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates