வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல - மனோ எம்.பி.
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல. தமது பாரம்பரிய பிரதேசங்களில் மிகவும் கௌரவத்துடன் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம். இது தமிழர் பிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினையாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார். தேசிய நூலக மற்றும் ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர மேடை அமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மனோகணேசன் எம்.பி. அங்கு மேலும் கூறியதாவது: அகதிகள் விகவகாரத்தை பிரிவினைவாத பிரச்சினை மற்றும் பயங்கரவாத பிரச்சினை என்று கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் இது தமிழ் பிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினை என்பதை தெரிவிக்கின்றோம். இதற்கு பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதா? என்ற சந்தேகம் நிலவுகின்றது. நாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் பேசும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகவே வெளியில் செல்கின்றன. நேற்று முன்தினம் நேற்று மற்றும் இன்று நாளை என நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. எமது பயணங்கள் வேகமடைகின்றன.
0 Response to "வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல - மனோ எம்.பி."
แสดงความคิดเห็น