நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் கவலையளிக்கின்றன - பான் கீ மூன்
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். கால நிலை தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள பான் கீ மூன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் மூன்று இலட்சம் அகதி மக்களின் நிலைமை கவலையளிக்கின்றது. அவர்களுக்கான வசதிகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. முகாம்களுக்கு வெளியில் செல்வதற்கு அம்மக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
0 Response to "நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் கவலையளிக்கின்றன - பான் கீ மூன்"
แสดงความคิดเห็น