இடம்பெயர்ந்த குடும்பங்கள் பாடசாலைகளிலிருந்து முகாமுக்கு மாற்றம்
செட்டிகுளம் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை ஆகியவற்றில் இருந்த இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருதமடுவ இடைத்தங்கல் முகாமுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 7 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவிருப்பதையடுத்து, பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் ஆரம்பமாகவுள்ள மழைகாலத்தின்போது, மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளது. எனவே தேவையேற்படின், இந்தப் பாடசாலை மண்டபங்களைப் பயன்படுத்தும் நோக்கத்திற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. மருதமடுவ இடைத்தங்கல் முகாம் மேட்டுத் தரையில் அமைக்கப்பட்டிருப்பதனால், மழை காலத்தில் அங்கு வெள்ளநீர் பிரச்சினை ஏற்படமாட்டாது என்றும் நம்பப்படுகின்றது.
0 Response to "இடம்பெயர்ந்த குடும்பங்கள் பாடசாலைகளிலிருந்து முகாமுக்கு மாற்றம்"
แสดงความคิดเห็น