படையினரின் மோதல் நடவடிக்கைகளை அரச ஊடகவியலாளர்கள் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்காக வடக்கில் இரு தரப்பினருக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன. இதன்போது படையினரின் மோதல் நடவடிக்கைகளை அரச ஊடகவியலாளர்கள் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒளித் தொகுப்புப் படங்கள் மற்றும் நாடாக்கள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும்படி தகவல், ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய ரூபவாகினி கூட்டுத்தாபனம், சுயாதீனத் தொலைக்காட்சி போன்றவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
போர் நடவடிக்கைகளை வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கான அனைத்து வசதிகளும் அனுசரணைகளும் அரச தொலைக்காட்சிகள் இரண்டுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் காட்சிகள் அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் - 4 ஊடாக வெளியிடப்பட்டன. இது குறித்து சர்வதேச சமூகம் அரசாங்கத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையிலேயே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்ட உத்தரவை அவசர அவசரமாக வழங்கியுள்ளார்.
அக்காலப் பகுதியின் போது அரச தொலைக்காட்சிகள் இரண்டின் ஊடகவியலாளர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டதும் வெளியிடப்படாததுமான ஒளிப்பதிவு நாடாக்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றனவா? அல்லது அந்த நாடாக்களில் எவையேனும் காணாமல் போயுள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 Response to "படையினரின் மோதல் நடவடிக்கைகளை அரச ஊடகவியலாளர்கள் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது"
แสดงความคิดเห็น