ஆறுமாதத்தில் 700 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய புகார்கள் இந்த வருடத்தில் மிக அதிகமாக உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் அறிவித்துள்ளனர்.2009 ஜனவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 792 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜகத் வெள்ளவத்த கூறியுள்ளார்.
இந்தப் புகார்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, சிறுவர் ஆபாசப்படங்கள், சிறுவர் வியாபாரம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவையாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தவிர்ப்பதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் பல அரச அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு போன்ற அரச சாரா நிறுவனங்களும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

0 Response to "ஆறுமாதத்தில் 700 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்"
แสดงความคิดเห็น