jkr

மாணவர்களின் செல்போனில் ஆபாச படம்


சென்னை யானைகவுனி பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களை கெடுக்கும் நோக்கில் சில வியாபாரிகள் கம்ப்யூட்டர் மூலம் அவர் களின் செல்போனில் ஆபாச படங்களை பதிவு செய்து கொடுப்பதாக புகார் வந்தது.இணை கமிஷனர் சேசசாயி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் பெரிய்யா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் மின்ட் தெருவில் கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படங்களை செல்போன் மெமரி கார்டில் பதிவு செய்த வாலிபர் அஜீத் (24) என்பவரை கைது செய்தனர்.அதே போல் யானைகவுனி தெருவில் இன்டர் நெட் ஆபாச படங்களை செல்போனில் பதிவு செய்த தீபக் (25) என்பவரையும் கைது செய்தார். 2 கடைகளில் இருந்தும் ஏராளமான ஆபாச சி.டி.க்கள், கம்ப்யூட்டர்கள், கார்டு ரைட்டர்கள், செல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.செல்போன் வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள் அதில் ஆபாச காட்சிகளில் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மாணவர்களின் செல்போனில் ஆபாச படம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates