அனாதை இல்லத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு நாளை மருத்துவ பரிசோதனை

ஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தில் சத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அனாதை இல்லம் உள்ளது. இதை சாது இமானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார் நடத்தி வந்தார். இங்கு வசித்து வருபவர்கள் ரேகா (18), சுஜாதா (20) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவர்களுடன் மேலும் 9 குழந்தைகளும் தங்கி இருந்தனர்.இந்த நிலையில் ரேகா காட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் பாதிரியார் சாது இமானுவேல் தன்னையும் தன்னுடன் தங்கி இருந்த சுஜாதாவையும், கற்பழித்து விட்டார் என்று கூறி இருந்தார்.இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் அனாதை இல்லத்துக்கு விரைந்து சென்றனர். பாதிரியாரிடம் விசாரணை நடத்தினார்கள். ரேகா, சுஜாதாவிடம் விசாரித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் சாது இமானுவேலை கைது செய்தனர்.அனாதை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அதில் தங்கி இருந்த குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே அனாதை இல்லத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவிட்டார். பெண் டி.எஸ்.பி. நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.அவர் அனாதை இல்லத்துக்கு சென்றார். அங்கு பாதிரியாரின் மனைவி அருள்மேரி, மகன் ரஞ்சித்சிங் மகள் நளினி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி. நாகஜோதி விசாரணை நடத்தினார்.அந்த அனாதை இல்லம் மிகச்சிறிய வீடு போலவே காணப்பட்டது. அந்த வீட்டில் 11 அனாதை குழந்தைகளை வைத்திருந்தது எப்படி? பாதிரியாரின் குடும்பம் அங்கேயே இருந்த போதிலும் அந்த இல்லத்திலேயே வயதுக்கு வந்த பெண்களை தங்க வைத்தது ஏன் என்பது பற்றியெல்லாம் டி.எஸ்.பி. நாகஜோதி விசாரித்தார்.அந்த அனாதை இல்லத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது பற்றி அவர் விசாரணை நடத்தினார்.இதற்கிடையே அனாதை இல்லத்தில் கற்பழிக்கப்பட்ட ரேகா, சுஜாதா இருவருக்கும் நாளை மருத்துவ பரிசோதனை நடக்கிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இந்த வழக்கு விசாரணை மேலும் தீவிரம் அடையும்.







0 Response to "அனாதை இல்லத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு நாளை மருத்துவ பரிசோதனை"
แสดงความคิดเห็น