மகளிடம் உபதேசம் கேட்டது போலிருந்தது
உன்னைப்போல் ஒருவன் படத்துக்காக மகள் சுருதியின் இசையில் பாடியபோது, அவர் சொன்ன திருத்தங்கள் தந்தைக்கு மகள் உபதேசம் செய்ததைப் போல இருந்ததாக கலைஞானி கமலஹாசன் கூறினார்.இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கி, நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்து வெற்றி பெற்ற 'எ வெட்னஸ்டே' படத்தை கமல்ஹாசன் தமிழில் 'உன்னைப்போல் ஒருவன்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஈநாடு' என்ற பெயரிலும் தயாரித்து வருகிறார்.இந்தப் படத்தில் கமலஹாசன், மோகன்லால் இணைந்து நடிக்க சக்ரி டொலட்டி இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் தனது தந்தை கமல்ஹாசனை இரண்டு பாடல்கள் பாட வைத்துள்ளார் ஸ்ருதி.மகள் இசையில் பாடிய அனுபவம் குறித்து இப்படிக் கூறுகிறார் கமல்:உன்னைப்போல் ஒருவன் படத்தில் பாடல்கள் இல்லை என்பது தவறு. அந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. 4 பாடல்கள் பின்னணி காட்சியாக வரும். ஒரு பாடல் டிஸ்கோ மிக்ஸ் ஆக வரும். பாடல்கள் எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்துள்ளன. மனுஷ்யபுத்திரன் முதல்முறையாக ஒரு பாடலையும், ஒரு பாடலை நானும் (கமலஹாசன்) எழுதியுள்ளோம்.மடோனா, ஜேம்ஸ்பாண்ட் ஆகியோர் பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெறும். இசைக்கு இந்த படத்தில் தனித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி ஹாசன் இசை அமைத்துள்ளார். என் மகள் என்பதற்காக அவரை நான் பாராட்டவில்லை. ஸ்ருதி ஹாசன் என்பது அவளுக்கு ஒரு விலாசம்தான். தகுதியின் அடிப்படையில் தான் அவர் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு சரியான நியாயம் வழங்கியிருக்கிறார்.தன்னம்பிக்கையுடன் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். நானும் பாடியிருக்கிறேன். நான் பாடியபோது குற்றம் , குறைகளை, ஏற்றம் இறக்கங்கள் ஆகியவற்றை எனக்கு சொல்லிக் கொடுத்து ஒரு தேர்ந்த இசைஅமைப்பாளர் போலத்தான் நடந்துகொண்டார். கிட்டத்தட்ட தந்தைக்கு மகள் உபதேசம் செய்தது போல இருந்தது... என்றார்.







0 Response to "மகளிடம் உபதேசம் கேட்டது போலிருந்தது"
แสดงความคิดเห็น