இலங்கைச் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அரசாங்கத்துக்கு கடிதம்
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மற்றும் அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள் தமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை எவ்வித விசாரணையும் இன்றி தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது குறித்த அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
இது குறித்து தமிழோசையிடம் பேசிய இலங்கை அமைச்சர் புத்திரசிகாமணி, இவர்களின் விவகாரம் தொடர்பாக ஒரு அரசாங்ககுழு ஆராய்ந்து வருவதாகவும் அது எடுக்கும் முடிவுன் அடிப்பையில் இவர்கள் ஒவ்வொருவரது விடயமும் தனித்தனியாக கையாளப்படும் என்று தெரிவித்தார்.
இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரையும் அரசியல் கைதிகள் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியாத போதிலும், விரைவில் இவர்கள் விடயம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 Response to "இலங்கைச் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அரசாங்கத்துக்கு கடிதம்"
แสดงความคิดเห็น