jkr

கைசெய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியின் பின்னணியில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள்.


புலிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி புலிகளின் பல பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றஞ்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்எஸ்பி லக்ஸ்மன் கூரேயின் பின்னணியில் ஆழும் அரசின் மிகவும் சக்கிவாய்த அரசியல்வாதியும், பிரதமர் பதவியை இலக்கு வைத்து இருப்பவர் ஒருவரும் இருப்பதாக லங்கா இரிதா எனும் சிங்களப் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி யாழ்பாணத்தில் இருந்து கம்பஹா விற்கு இடமாற்றம் பெறுவதற்கும் அவருடைய பதவி உயர்விற்கும் குறிப்பிட்ட அரசியல்வாதியே தனது செல்வாக்கை பயன்படுத்தியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பத்திரிகை தெரிவிப்பதுடன், அமைச்சர்களான ஜெயராஜ் பெர்ணான்டோப்பிள்ளை, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீது புலிகளின் தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு குறிப்பிட்ட அரசியல்வாதியின் தூண்டுதலிலேலே பொலிஸ் அதிகாரி புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதியை கொல்வதற்காக அவர் விமானமூலம் சென்று இறங்கவிருந்த இடம்ஒன்றில் சக்திவாய்ந்த கிளேமோர் குண்டொன்றை புதைத்து வைத்திருந்தாகவும் அதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் சமையற்காரரான முஸ்லிம் இராணுவக்கோப்ரலின் உதவியையும் பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு லக்ஸ்மன் கூரே மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள புலிகளிடம் இருந்து கட்டளைகளைப் பெற்றுள்ளதாகவும், இதன்பொருட்டு அவர் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்பியாக பாராளுமன்றம் நுழைந்த ஒருவருடன் நெருங்கிய உறவைப்பேணி வந்தகாகவும், புலிகளின் பழைய கொலைப்பட்டியலில் உள்ள முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதே இவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்திட்டங்கள் என தெரியவருகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கைசெய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியின் பின்னணியில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates