விளங்காத விடியல்
ஏங்கும் இதயம் பற்றி
எழுத்தாணிக்கு கவலையில்லை!!! இடைமறிக்கும் உன் நினைவுகளையேஎழுதச் சொல்லி துடிக்கிறது.....தாங்குவேன் நானென்றுவெறும் தவிப்புகளையேபரிசளிக்கிறாய்.....ஈரம் கொண்டஇளஞ்சிவப்பு இதழ்கள்இரக்கமில்லாத உன் கைகள்இட்ட வேலியில்உன் இதயத்துக்கு பக்கத்தில் நான்....இரவுகளை இழக்க மனமின்றிஇனியவன் துணையின்றிஇம்மியளவும் வாழ்வில் சுவையின்றிவிரகமென்று நிற்கும் போதுவிழித்திரை வேர்க்கும் முன்னேவிரதத்தை முடிக்கிறாய்!!!தூங்காத மனமோ தூயவன்உனையெண்ணி துடிக்க...அர்த்த ராத்திரி அனைத்தும்அமைதி காக்கிறது..நீ ஆலிங்கனம்செய்யவேண்டி...நினைவுகளின் ஈரம்சுவாசத்தில் காய மறுக்கஅணைக்கும் ஆவேசத்தில்அர்த்த ஜாமமோ அடுத்தபொழுதை தர வெறுக்கிறது...மனதில் காதலோடுமறுத்து போன உடலோடுவெறுத்து போகுதடா காதல்கறுத்த இரவும் விடியல் கண்டு....வெளுத்து விடிகிறதடா?வேதனையில் துடித்துவிழிக்கிறதடா!!!!!!
0 Response to "விளங்காத விடியல்"
แสดงความคิดเห็น