jkr

மட்டு. காத்தான்குடி கொள்ளைச் சம்பவங்கள் : முன்னாள் அதிரடிப் படை வீரர் சந்தேகத்தில் கைது


மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் விசேட அதிரடிப் படை சார்ஜன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது அந்நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
மேற்படி சந்தேக நபர்கள் கைதான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட விசேட அதிரடிப் படை சார்ஜன் விடுமுறையில் சென்றிருந்தார் என்றும் மீள கடமைக்குத் திரும்பாத நிலையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
விசாரணைக்காக அழைக்கப்பட்டுத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர், கொள்ளையர்களுக்கு கைக்குண்டுகளை வாடகைக்கு வழங்கி உதவியுள்ளார் என்றும் இதற்காக ஒரு தடவைக்கு மட்டும் ரூபா 20 ஆயிரம் பெற்றிருந்தார் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மட்டு. காத்தான்குடி கொள்ளைச் சம்பவங்கள் : முன்னாள் அதிரடிப் படை வீரர் சந்தேகத்தில் கைது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates