நலன்புரி நிலையங்களில் இருந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டனர்
எமது சுதந்திரங்களை நாமே பாதுகாப்பதுடன் அவற்றை எவருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் கைதடி பல்கலைக்கழக மாணவர் விடுதி நலன்புரி நிலையத்தில் இடம்பெற்ற போது பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மாணவர்களைக் கையளித்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்ட நாள் கனவு நனவாகும் சந்தோஷத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்றும் இம்மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக் கற்கைநெறிகளைத் தொடர்வதற்கு இவர்களுக்கு மிகத் துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 48,000 மக்களை எதிர்வரும் காலநிலையைக் கருத்திற் கொண்டு அனைத்துத் தரப்பினரின் பூரண ஒத்துழைப்பின் பேரில் மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
தற்போது பல்கலைக்கழகக் கற்கைநெறிகளைத் தொடரவுள்ள மாணவர்கள் சமுதாய வளர்ச்சிக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் வன்முறைக்கு உதவக் கூடாது எனவும் கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது சுதந்திரங்களைப் நாமே பாதுகாப்பதுடன் அவற்றை எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்க கூடாது எனவும் தெரிவித்தார். வவுனியா நலன்புரி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களைக் கையளிக்கும் இந்நிகழ்வில் யாழ்.அரசாங்க அதிபர் கே. கணேஷ் யாழ்.செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் பிரதீபன் சாவகச்சேரி பிரதேச செயலாளர் ஸ்ரீநிவாசன் மற்றும் பல்கலைக்கழக மாணவத் தலைவர் உட்படப் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Response to "நலன்புரி நிலையங்களில் இருந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டனர்"
แสดงความคิดเห็น