முன்னேற்றத்தை தாங்கிக் கொள்ளாது சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக சதி - பந்துல
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றம் அடைந்துவருவதை தாங்கிக்கொள்ள முடியாத சில சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக சதித்திட்டங்களை மேற்கொண்டுள்ளன. அந்த சக்திகளின் உள்நாட்டு முகவர்களாக பலர் இலங்கையிலும் செயற்படுகின்றனர் என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைத்தால் வரவேற்போம். ஆனால் கிடைக்காவிடின் நாம் அது குறித்து கவலையடையவேண்டியதில்லை. சவால்களுக்கு முகம்கொடுத்து பொருளாதார தடைக்கற்களை கடந்துசெல்லவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது
நாட்டின் பிரதான அரச வங்கிகள் வட்டி வீதங்களை இரண்டு வீதத்தினால் குறைத்துள்ளன. இது நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு சிறந்த முறையில் வலு சேர்க்கும் விடயமாகும். இதன்மூலம் மக்கள் குறைந்த வட்டி வீதங்களில் கடன்களை பெற்றுக்கொள்ளலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செலவுகள் குறைவடையும்.
பணவீக்கமும் வட்டி வீதங்களும் குறைந்து காணப்படுவது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படும் பண்புகளில் ஒன்றாகும். இந்நிலையில் இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகும். எனவே வட்டி வீதம் குறைவடைகின்றமை மற்றும் பணவீக்கம் வீழ்ச்சிகண்டுள்ளமை என்பன ஆரோக்கியமான நிலைமையாகும்
0 Response to "முன்னேற்றத்தை தாங்கிக் கொள்ளாது சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக சதி - பந்துல"
แสดงความคิดเห็น