மற்றுமோர் சட்டவிரோத படகு அவுஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்டது.
இலங்கையர்களும் உள்ளடங்கியுள்ள சட்ட விரோத படகு ஒன்றை அவுஸ்ரேலிய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று அவுஸ்திரேலியாவின வடக்குப் பகுதியின் கொக்கோஸ் கீலிங் தீவுகளுக்கு அப்பால் 630 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. இது கடந்த இரண்டு வார காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைந்த ஆறாவது படகாகும். இந்த படகு இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் கரையோர கண்காணிப்பு ஹெலிகொப்டர்களினால் கண்டு பிடிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த படகில் இருந்த சிலர் கடல் வாந்தி நோய்களுக்கு உட்பட்டிருந்ததால் அவர்களுக்கு தண்ணீரும் உணவும் மனிதாபிமானமான முறையில் விநியோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் இந்த படகில் உள்ளோரை கரையோர பாதுகாப்புப் பிரிவினர் காப்பாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Response to "மற்றுமோர் சட்டவிரோத படகு அவுஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்டது."
แสดงความคิดเห็น