பிரான்ஸில் இயங்கி வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் முகாம் கலைப்பு
பிரான்ஸ் பொலிஸார், கலாயிஸ் துறைமுக நகருக்கு அண்மையில் குடியேற்றவாசிகளால் ஸ்தாபிக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமொன்றை கலைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
"த ஜங்கிள்' எனப் பிரபலம் பெற்ற முகாமில் இடம்பெற்ற படை நடவடிக்கையில், 278 குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டதாகவும் அங்கிருந்த 1000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் ஏற்கனவே வெளியேறியுள்ளதாக கருதப்படுவதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது மனித உரிமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதியதில் அவர்களில் சிலரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் பிரித்தானிய உள்துறைச் செயலாளர் அலன் ஜோன்ஸன் விபரிக்கையில், குடியேற்றவாசிகள் சிலரை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக கூறினார். இந்நிலையில், மேற்படி இடைத்தங்கல் முகாமை கலைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் கலாயிஸ் தலைமை பொலிஸ் அதிகாரி பியர்ரே டி போஸ்குயட் டி புளோரியன் விபரிக்கையில், இதன்போது 146 வயதுவந்தவர்கள், 132 பராயமடையாதவர்கள் ஆகியோரை தடுத்து வைத்துள்ளதாகவும் பெண்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் கூறினார்.
மேற்படி அனைவருக்கும் புகலிடம் வழங்கவும் அன்றி சொந்த நாடுகளுக்கு சுயமாக திரும்புவதற்கான உதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி முகாம் ஆனது ஆட்களைக் கடத்துபவர்களின் தளமாக இயங்குவதை கவனத்திற் கொண்டே அதனை மூட நடவடிக்கை எடுத்ததாக பிரான்ஸ் குடிவரவு அமைச்சர் எறிக் பெஸன் கூறினார்

0 Response to "பிரான்ஸில் இயங்கி வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் முகாம் கலைப்பு"
แสดงความคิดเห็น