jkr

வைத்தியசாலைகளுக்கு ஏஎச்1என்1 தொற்றுக்கான மருந்து விநியோகம்:சுகாதார அமைச்சு


நாட்டின் பல பாகங்களில் ஏஎச்1என்1 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இத்தொற்றின் மூலம் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஏஎச்1என்1 தெற்றுக்கான மருந்துப் பொருட்கள் தேவைப்படுவதாகவும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அவற்றை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளுக்கும் இந்த மருந்துப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருந்துப் பொருள் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் சரத் வீர பண்டார குறிப்பிட்டார்.

ஏஎச்1என்1 வைரஸ் தொற்றுக்கான மருந்துப் பொருட்கள் போதுமான அளவு ஏற்கனவே வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வைத்தியசாலைகளுக்கு ஏஎச்1என்1 தொற்றுக்கான மருந்து விநியோகம்:சுகாதார அமைச்சு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates