jkr

சிவில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு பாப்பரசர் வேண்டுகோள்


பாப்பரசர் 16ஆவது ஆசிர்வாதப்பர், 25 வருட கால சிவில் யுத்தம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்துள்ள இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்தமாறு அதிகாரிகளிடமும் மக்களிடமும் வலியுறுதிக் கோரியுள்ளார். கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்த யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை, அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்த உதவும் அதிகாரிகளின் முயற்சிகளை நேற்று பாராட்டிய பாப்பரசர், இந்த முயற்சிகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மனித உரிமைகளை முழுமையாக மதித்துப் பேணுவதற்கு உறுதிபூணுமாறு அவர் சகல இலங்கையர்களிடமும் விநயமாகக் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கு மனிதநேய மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்யுமாறு பாப்பரசர் சர்வதேச சமூகத்திடம் கோரியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை வெற்றிகொண்டதன் மூலம் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு சுதந்திரத் தாயகம் ஒன்றை அமைத்துக்கொள்ளும் அவர்க ளது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிவில் யுத்தத்தின் காரண மாக 80 ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.பாப்பரசர் 16ஆவது ஆசிர்வாதப்பர், 25 வருட கால சிவில் யுத்தம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்துள்ள இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்தமாறு அதிகாரிகளிடமும் மக்களிடமும் வலியுறுதிக் கோரியுள்ளார். கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்த யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை, அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்த உதவும் அதிகாரிகளின் முயற்சிகளை நேற்று பாராட்டிய பாப்பரசர், இந்த முயற்சிகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மனித உரிமைகளை முழுமையாக மதித்துப் பேணுவதற்கு உறுதிபூணுமாறு அவர் சகல இலங்கையர்களிடமும் விநயமாகக் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கு மனிதநேய மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்யுமாறு பாப்பரசர் சர்வதேச சமூகத்திடம் கோரியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை வெற்றிகொண்டதன் மூலம் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு சுதந்திரத் தாயகம் ஒன்றை அமைத்துக்கொள்ளும் அவர்க ளது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிவில் யுத்தத்தின் காரண மாக 80 ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சிவில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு பாப்பரசர் வேண்டுகோள்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates