ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு பௌத்த மதகுருமார் எதிர்ப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து பௌத்த மதகுருமார் சிலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் நுழைகின்றமை குறித்துத் தமது கவலையை வெளியிட்டுள்ள மெதகம தேரர், சரத் பொன்சேகா தனது இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனக் கோரியுள்ளார்.
சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்வதற்கு எதிராக பௌத்த பீடங்கள் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா அரசியலில் குதிக்கின்றமை குறித்த தமது கவலையைக் கண்டியின் பௌத்த பீடாதிபதிகளிடமும் முறையிடப் போகிறார் என மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.







0 Response to "ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு பௌத்த மதகுருமார் எதிர்ப்பு!"
แสดงความคิดเห็น