jkr

அகதிகள் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் அவுஸ்திரேலிய பிரதமர் பேச்சு. கடலில் மூழ்கியவர்களைத் தேடும் பணியும் தொடர்கின்றது.


அரசியல் அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா வரும் இலங்கை தமிழ் அகதிகள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

இது தவிர அவுஸ்திரேலியாவின் அதியுயர் ராஜதந்திரியான ஜோன் மெகாதியை இலங்கைக்கு தனது சார்பாக இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரபல நாளேடான பிரிஸ்பேன் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொருபுறம் இந்துமா சமுத்திரத்தில் மூழ்கிய கப்பலில் இருந்தவர்களில் அரசியல் அடைக்கலம் கோரிய நிலையில் காணாமல் போயுள்ள 11 இலங்கையர்களை தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் தேடுதல் விமானம் ஒன்று அந்த கடற் பிராந்தியத்துக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளதாக அவுஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றிய நிலையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கப்பல் கொக்கோஸ் தீவுகளுக்கு அப்பால் மூழ்கத்தொடங்கியது. இந்த கப்பலில் அபாய சமிஞ்ஞையை அடுத்து அந்த பிராந்தியத்தில் இருந்த கப்பல்கள் 27 பேரை காப்பாற்றியதுடன் ஒரு சடலத்தையும் மீட்டெடுத்திருந்தனர். இந்த நிலையில் இருள் சூழ்ந்ததன் காரணமாக மீட்புப்பணிகள் உரிய முறையில் நடைபெறாத நிலையில் மீண்டும் தேடும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அகதிகள் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் அவுஸ்திரேலிய பிரதமர் பேச்சு. கடலில் மூழ்கியவர்களைத் தேடும் பணியும் தொடர்கின்றது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates