வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ் வந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்!
|
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ் வந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்!
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து இரண்டு கட்டமாக அழைத்து வரப்பட்ட பொதுமக்களை யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று மாலை சந்தித்து அம்மக்களின் சேமநலன் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
இன்று அழைத்து வரப்பட்டவர்களில் முதற் கட்டமாக 509 குடும்பங்களைச் சேர்ந்த 1675 பேரும் இரண்டாம் கட்டமாக அழைத்து வரப்பட்டவர்களில் 600 குடும்பங்களைச் சேர்ந்த 1952 பேரும் அடங்குகின்றனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் உடுவில் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த இம்மக்களுக்கான உடனடி கொடுப்பனவாக 5000 ரூபாவை வழங்கி அம்மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள் பலத்த சிரமங்களின் மத்தியில் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு வந்துள்ளீர்கள் என்றும் நடைபெற்று முடிந்த கொடூர நிகழ்வுகளை ஒரு கெட்ட கனவாக கருதி அதனை மறந்து விட்டு உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்கான முயற்சியை முன்னெடுக்குமாறும் இந்த முயற்சியில் தான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
நம்பிக்கைதான் வாழ்க்கை நீங்கள் சந்தித்த அனைத்து அவலங்களையும் நான் அறிவேன். மிகுந்த விலை கொடுத்து பெற்றுள்ள இந்த அமைதியான சூழலை இனியாருக்கும் தாரைவார்த்து விடாது உங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்காக அனைத்து முயற்சியையும் முன்னெடுக்குமாறும் அம்மக்களிடம் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
நிரந்தரமான உங்கள் குடியேற்றத்துக்காக ஆறுமாத கால உலருணவை நாம் வழங்கவுள்ளதுடன் வீட்டுப் பாவனைப் பொருட்கள் சமையல் உபகரணங்கள் மற்றும் தொழிலை ஆரம்பிப்பதற்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இந்த உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் தொழில் முயற்சிகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் அவர்கள் அம்மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)







0 Response to "வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ் வந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்!"
แสดงความคิดเห็น