உள்ளூர் சேவைக்கு மேலும் ஆறு புதிய விமானங்கள்:அமைச்சர் சாமல்

மஹிந்த சிந்தனையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்ப உள்ளூர் விமான சேவையின் மேம்பாடு கருதி 6 புதிய சிறிய விமானங்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுமார் 50 பேர் பயணம் செய்யக்கூடிய எம்.ஏ.-60 என்ற இந்த சிறியரக விமானங்களைக் கொள்வனவு செய்ய 105 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுவதால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
சீன அரசாங்கம் 5 வருடங்களில் திருப்பச் செலுத்தக் கூடிய வகையில் கடனுதவியாக இந்த விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்







0 Response to "உள்ளூர் சேவைக்கு மேலும் ஆறு புதிய விமானங்கள்:அமைச்சர் சாமல்"
แสดงความคิดเห็น