jkr

ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்!

ஜனாதிபதியின் ஆலோசகரும் பிரபல அரசியல் வாதியுமான வாசுதேவ நாணயக்கார அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்றிரவு அமைச்சரது யாழ் பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் யாழ் குடாநாட்டு நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியதுடன் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப்பிச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அதேவேளை யாழ் குடாநாடு விரைவாக சுமுக நிலையை நோக்கி முன்னேறி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாசுதேவ நாணயக்காரவுக்கு எடுத்துக் கூறியதுடன் வன்னியிலிருந்த யாழ் குடாநாட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களது பிரச்சினைகள் தேவைகள் குறித்து தான் கூடிய கவனம் செலுத்தி அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

ஏ-9 பாதையூடான போக்குவரத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் யாழ் குடாநாட்டில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வீதித்தடைகள் நீக்கப்பட்டு போக்குவரத்துக்கள் தடையின்றி நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த 10 வருடங்களாக பாதுகாப்புக் காரணங்களால் விவசாயம் செய்ய முடியாது தடுத்து வைக்கப்பட்டிருந்த விவசாய நிலங்கள் மீளவும் விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் உள்ளுர் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையேயான இச்சந்திப்பு தோழமையுடனும் நட்புடனும் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates