jkr

இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி


இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், தாம் தற்போது நடத்திவரும் ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரமாக்குவதுடன், மேலும் வேறு வழிகளிலும் போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப் போவதாகவும் அவை கூறுகின்றன.
இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன.
இது தொடர்பாக பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ஆயினும் அவை இதுவரை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.
அந்த நிலையில் இன்றும் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடந்தன. ஆனால், தொழிலாளர்களுக்கு 360 ரூபா மாத்திரம் தினசரி சம்பளமாகத்தரவே முதலாளிமார் உடன்பட்டதால், அவர்களுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு தாம் வெளியேறியதாக, இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம் தமிழோசையிடம் தெரிவித்தார். bbcnews
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates